அக்கரைப்பற்றில், தீர்த்தமாட கடலுக்குச் சென்றவர் பலி




வி.சுகிர்தகுமார்  
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் ஆலய உற்சவத்தின் தீர்த்தோற்சவத்திற்காக கடலுக்குள் சென்ற இளைஞன் கடலையில் சிக்குண்டு இன்று(25) உயிரிழந்ததுடன், மற்றுமொரு இளைஞன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இராமலிங்கம் ஜெகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.