நிட்டம்புவ – கலகெடிஹேன பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.
எரிபொருள் தாங்கிகளுக்கு பவுசரிலிருந்து எண்ணெய் நிரப்பிக் கொண்டிருக்கும் போதே தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.
இதன் காரணமாக, கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment
Post a Comment