(க.கிஷாந்தன்)
வெலிமடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட போகஹகும்புர கோணகொல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 25 ஏக்கர்கள் அரச வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக வெலிமடை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
பிரதேசத்தில் நிலவுகின்ற வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.
பதுளை மாவட்ட தீயனைப்பு பிரிவினர், தியத்தலாவை இராணுவத்தினர், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் 23.08.2017 அன்று நள்ளிரவளவில் தீயை கட்டு பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதன்போது சுமார் 25 ஏக்கர்கள் தீயினால் பாதிக்கபட்டிருந்ததோடு, அதிகாரிகளின் செயற்பாட்டினால் பாரிய ஓர் காட்டுத்தீயினை கட்டுபடுத்த கூடியதாக இருந்து.
குறித்த மலைத்தொடரில் சுமார் 300 ஏக்கர்கள் அரச வன நிலப்பரப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment