500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக, திலங்க சுமதிபால தாக்கல் செய்திருந்த வழக்கை நுகேகொடை மாவட்ட நீதிமன்றம் இன்று கட்டணங்கள் இன்றி தள்ளுபடி செய்தது.
மாவட்ட நீதிபதி நாமல் பண்டார பலல்லவின் கோரிக்கைக்கு அமைய, மேலதிக மாவட்ட நீதிபதி வை.ஆர்.டி.நெலும்தெனிய வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்.
திலங்க சுமதிபால ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் எனவும் கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக செயற்பட முடியாத ஒருவர் எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்ததால், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து திலங்க சுமதிபால இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அர்ஜூன ரணதுங்க இந்த கருத்துக்களை வௌியிட்டிருந்ததாக திலங்க சுமதிபால தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
Post a Comment
Post a Comment