நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கீதா குமாரசிங்கவிற்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை உள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே யார் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளனர் என்ற சர்ச்சை அண்மைய நாட்களில் நிலவியது. இது குறித்து அறிந்துக்கொள்ள பெப்ரல் அமைப்பு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கமைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விண்ணப்பம் ஒன்றை வழங்கியிருந்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாளஅட்டை இலக்கம் என்பன அடங்கிய பட்டியலை நாடாளுமன்ற செயலாளரிடமிருந்து பெற்றுக்கொண்டது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்கவுக்கு மாத்திரம்17096 என்ற இலக்கம் கொண்ட இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகதெரியவந்துள்ளது.
ஏனைய நாடாயுமன்ற உறுப்பினர்கள் 224 பேரும் இரண்டை குடியுரிமை கொண்டிருக்கவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment