நீண்ட காலமாக கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயம் கடந்த வருடம் அலுவலக தேவைகள் காரணமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் மிக விரைவில் மீண்டும் அதனை கல்முனையில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒழுங்கு செய்திருந்த நடமாடும் சேவை இன்று (28) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
"கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றம் செய்தபோது அதனை எதிர்த்து சிலர் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.
இந்த செயற்பாடு ஆரோக்கியமான ஒன்றல்ல. குறித்த நபர்கள் அடையாளம் காணப்படுமிடத்து வெளியே வர முடியாதவாறு சிறையில் அடைக்கப்படுவர்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.அமீர், சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி சனசூரிய, ஐக்கிய தேசிய கட்சி கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் ரஸாக் உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment
Post a Comment