எவர் விலகினாலும் 2020 வரை அரசாங்கத்தை நடத்தில் செல்வேன்




எவர் விலகிச் சென்றாலும், 2020 வரை அரசாங்கத்தை நான் நடத்தில் செல்வேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஊடக நிறுவன பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

2020 வரை கூட்டாட்சியை நடத்திச் செல்லும் சக்தி தனக்கு உள்ளதாக நம்புகிறேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலம் மட்டுமே சாத்தியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.