20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மாகாண சபைகளின் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சி என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
இந்த திருத்தம் எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் சபையில் இன்று அறிவித்தார்.
வட மாகாண சபையின் 103 ஆவது அமர்வு இன்று ஆரம்பமான போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் இதன்போது சபையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
Post a Comment
Post a Comment