அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 104 வது ஜனன தினம் இன்றாகும்.
ஜனன தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவரான சௌமிய மூர்த்தி தொண்டமான், மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பங்காற்றியவர்களில் முக்கியமான ஒருவராவார்.
இவர் 1999 ஆம் ஆண்டு தனது 86 வது வயதில் இயற்கை எய்தினார்.
Post a Comment
Post a Comment