யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
யாழ். சாவகச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.