நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற மறுத்த மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவுக்கு, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு வாரம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை ஒரு வாரத்துக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்குத் தடை விதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தடைவிதிப்பதற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.