-அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை, பாலம்பட்டாறு பகுதியில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்புபாகம் டிமோ பட்டா லொறியுடன் மோதி விபத்துக்குள்ளான
தில் 18 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம், இன்று மாலை 6.30க்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய, ரஜஎல பகுதியில் இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மரணமடைந்த நபரொருவரின் 01 வருட பூர்த்தியை முன்னிட்டு, 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்துக்கு, தானமாக இரவு சாப்பாடு வழங்குவதற்காகவே அந்த டிமோ பட்டா லொறியில் அவர்கள் பயணித்துள்ளனர். அந்த லொறியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியில், மூன்று குடும்பங்களைச்சேர்ந்த 18 பேர் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்களில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.