பிரசவித்த சிசுவை குழிதோண்டிப் புதைத்த தாய்: சடலம் தோண்டியெடுக்கப்பட்டது




கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பகுதியில் புதைக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இன்று முற்பகல் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஆண் சிசுவொன்றின் சடலமே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள 21 வயதான பெண்ணொருவரால் இந்த சிசு பிரசவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிரசவித்த சிசுவை அந்தப் பெண் குழிதோண்டிப் புதைத்துள்ளதுடன், பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமணமாகாத யுவதி ஒருவரே சிசுவைப் பிரசவித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.