பாடசாலை அதிபர்கள் பயிற்சிச் செயலமர்வுக்காக இராணுவக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் எதிர்வரும் 22ம் திகதி இந்த பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம் மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தறை உதவி வலயக் கல்விப் பணிப்பாளரின் கையெழுத்துடன் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், இந்த பயிற்சியில் அனைத்து அதிபர்களும் கலந்து கொள்வது கட்டாயம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.