கலப்பு நீதிமன்று தொடர்பி்ல் கருத்து




மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் புதிய பொறிமுறையொன்றை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2017 சட்ட வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவரு தெரிவித்தார்.
ஒரு நாட்டில் உள்ள உயர்ந்த நீதிமன்ற கலப்பு (Hybrid) நீதிமன்றமாக இருக்கமுடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இஸ்தாபிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.