முகமூடி தலைக்கவசத்தை தடுக்காதே




முழுமையாக முகத்தை மூடி அணியும் தலைக்கவசத்துக்கு கடந்த பெப்ருவரி மாதம் 23 ஆம் திகதி வர்த்தமானியில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (05) காலை 9.00 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் ஊழியர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலுக்கு வருமாறு தமது சங்க உறுப்பினர்கள் சகலரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சங்க உறுப்பினர்கள் சகலரும் தமது மோட்டார் சைக்கிளில் வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றோம். பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதே எமது இலக்கு. அரசாங்கத்துக்கு எமது பலத்தை காட்டவேண்டும். முடியுமானால், முகமூடி தலைக்கவசம் ஒன்றையும் அணிந்து வாருங்கள். இந்த அநீதமான சட்டத்துக்கு எதிராக உங்களது பலத்தை காட்டுங்கள் எனவும் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளா