டுபாய் விமான நிலையத்தில் பயணப்பொதிகளுக்கு புதிய விதிமுறைகள்




துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்கள் அடங்கிய பயணப்பொதிகளுக்கு துபாய் விமான நிலைய நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை மார்ச் 8 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய விதிமுறைகளின் படி பிரயாணிகள் தங்கள் பயண உடைமைகளைக் கொண்டு செல்லும் முறையில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன்படி,

1. ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது
2. அதிக எடை கொண்ட பயண உடைமைகள் அனுமதிக்கப்பட மாட்டாது
3. வட்ட வடிவத்தில் கட்டப்பட்ட பெட்டிகள் அனுமதிக்கப்பட மாட்டாது
4. அனைத்து பயண உடைமைகளும் தட்டையானதாக இருக்க வேண்டும்

பொதிகளைப் பராமரிக்க‌ உலகத்தரம்வாய்ந்த அதிநவீன கருவியை துபாய் விமான நிலையம் பயன்படுத்தி வருகிறது.

இதனால் வட்ட வடிவம், ஒழுங்கற்ற மற்றும் அதிக எடை கொண்ட பெட்டிகளால் ஏற்படும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்யவே இந்த விதிமுறைகள் பயன்பாட்டிற்கு வருகின்றன.