இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சட்ட வாரம் - 2017 இன், 5ஆவது நாள் நிகழ்வு கொழும்பில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சட்டத்தரணிகள் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வின் பின்னர், இலவச சட்ட உதவி முகாமும் ஆரம்பித்தது. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், மக்களுக்கான இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன், சட்டம் தொடர்பான புத்தகமும் இலவசமாக வழங்கப்படுகிறது. -