-எம்.எஸ்.எம்.ஹனீபா-
பொத்துவில் அல் -குபா வித்தியாலயத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சருக்கு இன்று (28) அவர் அனுப்பியுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'பொத்துவிலிலுள்ள மாணவர்களின் நன்மை கருதி 2013ஆம் ஆண்டு ஜனவரியில் 39 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அல் -குபா வித்தியாலயம், பின்னர் முகாமைத்துவச் சேவைத் திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை காரணமாக 2013.05.02 அன்று மூடப்பட்டது.
முகாமைத்துவச் சேவைத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்ததும், இவ்வித்தியாலயத்தை மீள ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால் அப்போது அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மேற்படி திணைக்களத்திடமிருந்து இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மேற்படி திணைக்களத்திடமிருந்து அனுமதியைப் பெற்று இவ்வித்தியாலயத்தை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.