இலங்கை மீனவர்களைக் கைதுசெய்துள்ள இந்தியா




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் சிலர் இந்திய கடற் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதற்கமைய 10 மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் இவர்களது இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதேவேளை, இவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.