இலங்கை தர நிறுவனத்தின் சான்றிதழ் இல்லாமல் தீப் பெட்டி உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்று நிட்டம்புவ - பனவால பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சட்டத்தை மீறி எஸ்.எல்.எஸ் சான்றிதழ் இன்றி தீப் பெட்டிகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படுவதாக, கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 120 480 ரூபாய் பெறுமதியாக 28,080 தீப் பெட்டிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 17ம் திகதி குறித்த தொழிற்சாலைக்கு எதிராக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.