தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்து பக்தி பாடலை பாடியதற்காக கண்டனத்திற்கு உள்ளான முஸ்லிம் பெண்




இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண் ஒருவர் திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி ஒன்றில் இந்து பக்தி பாடலை பாடியதற்காக கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுஹானா சயீத். 22 வயது. சரி கம பா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கிறார்.
மங்களூர் முஸ்லிம்ஸ் என்ற முகநூல் பக்கம், சஹானா சயீத் ஹிஜாப் அணிந்து கொண்டு இந்து பக்தி பாடல்களை பாடியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆண்கள் முன்னிலையில் பாடி முஸ்லிம்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியுள்ள அந்த முகநூல் பதிவு, முகத்தை மறைக்கும் துணியை அவர் மதிக்காததால் அதனை அணியக் கூடாது என்று அது கூறியுள்ளது.
2012 ஆம் ஆண்டு மங்களூர் முஸ்லிம் என்ற முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் குரலாக இந்தப்பக்கம் இருக்கும் என்று அதன் சமீபத்திய பதிவு ஒன்று கூறுகிறது.
மங்களூர் முஸ்லிம்ஸ் முகநூல் பக்கத்திற்கு சுமார் 46 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், சையீத் குறிவைக்கப்பட்டது குறித்து சில தேசிய சேனல்கள் மற்றும் சில உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியான உடன் அந்த பக்கத்தை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மங்களூர் முஸ்லிம்கள் பக்கம் சயீத் குறித்த அந்த பதிவை நீக்கியுள்ளது. ஆனால், அதனைத்தொடர்ந்து போட்ட அவர்கள் போட்ட பதிவில், ` சயீத்தை தனிப்பட்ட முறையில் குறிவைப்பது எங்கள் நோக்கமல்ல' என்று தெரிவித்துள்ளது.

எனினும், சயீத்தின் செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்கு களங்கம் விளைப்பதாகவும், இந்து பக்தி பாடல்களை பாடி நீதிபதிகளிடம் அனுதாபத்தை பெற முயற்சித்ததாகவும் கூறி அந்த பக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.