(சா.நடனசபேசன்)
போதையற்ற சமூகத்தினை இந்தநாட்டில் உருவாக்கவேண்டுமானால் இளைஞர்களினதும் மாணவர்களினதும் கைகளிலே தங்கியுள்ளது கடந்த காலங்களைவிட இன்று போதைவஸ்துப்பாவனை அதிகரித்துச்செல்கின்றது அதனை கட்டுப்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்பை ஏற்படுத்துவது காலத்தின்தேவையாகும் என நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தின் சிறுவர் மேம்பாட்டு உதவியாளர் திருமதி.கஸ்பியாவீவி தெரிவித்தார்.
நன்நடத்தைமற்றும் சிறுவர் பராமரிப்பு வேலைத்திட்டத்தின் போதைவஸ்துப்பாவனையற்ற சிறுவர்களைக்கொண்ட மாதிரிக்கிராமத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு 3 ஆம்3 திகதி வெள்ளிக்கிழமை பிரதி அதிபர் என்.வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் எப்.ரி.நிலாந்தி சவளக்கடைப் பொலிஸ் சார்ள்ஜன் ஏ.எம்.சரிவ்இபி.ஏ.சமணபால ஆகியோர் கலந்துகொண்டனர்
அவர் மேலும் பேசுகையில் சராசரியாக 60-70 பேர் புகைத்தல் காரணமாக ஏற்படும்தொற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்.அவ்வாறானநிலையில் இந்த பழக்கத்திற்கு பாடசாலை மாணவர்களும் உள்வாங்கப்படுகின்றனர் இவ்வாறான சம்பவங்களால் இளம் சமூகம் பெரிதும் பாதிப்படைகின்றது.
சில பிரதேசங்களில் மதுஅருந்துவது கலாசாரமாக கொள்கின்றனர் அதனை பார்க்கின்ற இளைய தலைமுறையினர் அதனை தாங்களும் செய்துகொள்கின்றனர் இவ்வாறு பாடசாலைப்பருவத்தில் மாணவர்கள் போதைவஸ்க்குது அடிமையாகிக்கொள்வதற்கு இலகுவானதாக அமைந்துவிடுகிறது
நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக இருந்து எமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இன்றைய சிறுவர்களின் கைகளிலே உள்ளது அவ்வாறான சிறுவர்களை சரியான முறையில் வழிநடாத்தும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருக்கின்றது
பாடசாலையில் கல்விகற்கும் காலத்தில் சரியான முறையில் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுக்கவேண்டும். பாடசாலைக் காலத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு இறுதிவரைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் உயர்ந்த படிப்புகளைக் கற்று கல்வியியலாளர்களாக இருந்தாலும் எங்களிடத்தில் உயர்ந்த நற்பண்பு இருக்கவேண்டும் என்றார்