ரத்தமலானையிலிருந்து மாலைத்தீவுக்கு




சுமார் 50 வருடங்களின் பின்னர், ரத்மலானை விமான நிலையத்தில் மீண்டும் சர்வதேச வர்த்தக விமான சேவைப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், மாலைத்தீவு சர்வதேச விமான நிறுவனத்தின் டிஎச் 8 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்கள் மாலைத்தீவிலிருந்து ரத்மலானை வரை நாளாந்தம் சேவைகளை மேற்கொள்ளும். 

இதேபோன்று ரத்மலானையிலிருந்து மாலைதீவு வரையில் மொத்தமாக 6 விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை நோக்கமாகக் கொண்ட இந்த விமான சேவைகள் குறித்த விசேட பேச்சுவார்த்தையொன்று, ரத்மலானை விமானநிலைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றதுடன், இதற்கமைவாக உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.