எங்களுடைய ஆட்சிக் காலத்திலேயே சகலரும் சகல விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். முன்னைய ஆட்சிக் காலத்தில் இப்படி ஆர்ப்பாட்டம் நடத்த இயலுமா? வெள்ளை வான் கடத்தியிருக்கும் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஐனாதிபதிக்கு சொல்லுங்கள் அலுவலகத்தை இன்றைய தினம் காலை வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஐனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாவை சேனாதிராஜா கூறும் போது பட்டதாரிகள், ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறினார்.
இப்படி போரா ட்டம் செய்வதைக் காட்டிலும் என்னோடு பேசியிருந்தால் அவர்கள் மீது எனக்கு அன்பு அதிகரித்திருக்கும்.
உடனேயே 5 அல்லது 6 பேருக்கு வேலை கொடுத்திருக்க என்னால் இயலும்.
மேலும் இவ்வாறான போராட்டங்கள் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நடக்கின்றன. தெற்கில் வாய்க்கால் வெட்டாமல் விட்டதற்கும் கூட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
அவர்களை நான் கேட்பது சத்தம் போடாதீர்கள், பேசுவோம் வாருங்கள் என்பதே.
என்னுடைய ஆட்சியில் தான் எல்லோரும் போராடுகிறீர்கள். முன்னைய ஆட்சியில் போராட முடியுமா? வெள்ளை
வான் வந்திருக்கும்.
எமது ஆட்சியில் எல்லோரும் வீதியில் வந்து போராட முடிகிறது என்றார்.