ஜோசுவா ப்ரௌடர் என்பவர் “டுநாட்பே” (DoNotPay) எனும் செயலியை வடிவமைத்தபோது, உலகின் முதலாவது எந்திர வழக்கறிஞர் என்று அதனை அழைத்தார்.
உரையாடும் எந்திரக் கணினி செயலியான இது, எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் உரையாடலை மேற்கொள்கிறது.
அறிவுரை மற்றும் சட்ட ஆவணங்களை வழங்குவதற்கு முன் வழக்கு பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ள ஃபேஸ்புக் மெசஞ்சரை இது பயன்படுத்திக்கொள்கிறது.
தொடக்கத்தில் வாகனங்களை நிறுத்த இடம் தேடுவோருக்கு அல்லது அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க இந்த கணினி செயலி வடிவமைக்கப்பட்டது.
தற்போது ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் கல்வி பயிலும் பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான ப்ரௌடர், இந்த செயலியை, தஞ்சம் கோருவோர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்திருக்கிறார்.
இந்த எந்திர வழக்கறிஞர் தற்போது சட்டக் கோரிக்கைகளோடு வருகின்ற அகதிகளுக்கு உதவி வருகின்றார்.