ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயது வாலிபர் பரிதாபமாக பலி




நானுஓயா - கிளாசோ ஆற்றில் குளிக்கச் சென்ற 17 வயது வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்று (05) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். 

நுவரெலியா - ஒலிபன்ட் பகுதியை சேர்ந்த சரவணகுமார் ஸ்ரீநாத் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

நானுஓயா - கிளாசோ தோட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று மதியம், தனியாக ஆற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.

இதன்போது, சுழியொன்றில் அகப்பட்ட சரவணகுமார் ஸ்ரீநாத்தை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.