மகளிர் தினத்தில் 102 வயது...




கலனிவெளி கம்பனியின் டிலரி குரூப் தோட்டத்தில் தேயிலை மலையில் மகளிர் தின நிகழ்வு இடம்பெற்றது. 

டில்லரி குரூப் தோட்ட நிர்வாகமும் மனிதவள முகமைத்துவ பிரிவும் இணைந்து நடாத்திய இந் நிகழ்வில் 40 வருடங்கள் தொழிலாளியாக கடமையாற்றிய ஒய்வு பெற்ற 102 வயதுடைய நாகம்மா என்ற பெண்மனி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

மேலும் தேயிலை மலையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி மகளிர் தினம் கொண்டாப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் பல பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.