(ஜமால்டின்)
சற்று முன்னர் ஒலுவில் சீரா தொழிற்சாலைக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில்,ஒலுவில் அஸ்ரப் நகரைச் சேர்ந்த அஹமட்லெப்பை 22 வயதைச் சேர்ந்த ஒருவர் ஸ்தலத்தில் மரணம் இன்னும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மரணித்தவர் ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் விபத்துக்கு காரணமான அடுத்த மோட்டார் வாகனத்தை செலுத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மோட்டார் வாகனத்தை பொலிசார் எடுத்துச் சென்றுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது
மேலதிக விசாரணையை அக்கரைப்பற்றுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.