(க.கிஷாந்தன்)
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று 05.07.2016 அன்று மாலை 4.20 மணியளவில் நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் கார்லபேக் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலந்த காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும், அதில் பயணித்த இரு பெண்களும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்து ஏற்பட காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.