தண்டப் பணம் செலுத்தும் கால அவகாசம் அதிகரிப்பு




வாகன போக்குவரத்தின் போது இடம்பெறும் குற்றங்களுக்காக அறிவிடப்படும் தண்டப் பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த தண்டப் பணத்தை செலுத்துவதற்கு 14 நாட்களே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசம் போதாதுள்ளதாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.