இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாவது மாதமான ரமழான் முஸ்லிம்களிடையே தனிச் சிறப்பு பெற்று விளங்குவதைப் போல, அந்த ரமழான் மாதத்ததை முற்றுப் பெற வைக்கும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஈதுல் ஃபித்ர் எனப்படும் ஈகைத் திருநாள் நோன்புப் பெருநாள் தினமும் இஸ்லாத்தில் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது.நாடு தழுவிய ரீதியில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் சிலவற்றைத் தருகின்றோம்.
சர்வதேச மற்றும் இலங்கையில் இடம் பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
சர்வதேச மற்றும் இலங்கையில் இடம் பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அகில இலங்கை தவ்ஹீத் ஜமா அத்தினரின் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று 06.07.2016 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை நிறைவேற்றினர்.
இஸ்லாமிய வருடத்தின் ஒன்பதாவது மாதமான ரமழான் முஸ்லிம்களிடையே தனிச் சிறப்பு பெற்று விளங்குவதைப் போல, அந்த ரமழான் மாதத்ததை முற்றுப் பெற வைக்கும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளான ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தினமும் இஸ்லாத்தில் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது.
(க.கிஷாந்தன்)
அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.
அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
(ஏ.ஜி.ஏ.கபூா்)
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அக்கரைப்பற்று ஜும்ஆ பொிய பள்ளி வாயலில் இன்று (06) அல்-ஹாபிஸ்எஸ்.றைசுத்தீன் தலமையில் இடம் பெற்ற பொருநாள் தொழுகையையத் தொடா்ந்து தத்துவ முதுமானியும், மலேசிய சா்வதேச கற்கைகள் பல்கலைக்கழக கலாநிதிப்பட்ட இறுதியாண்டு மாணவருமான அல்-ஹாபிஸ் எம்.ஐ.சித்திக் மெளலவி அவா்க்ககளின் குத்பாப் பிரசங்கம் இடம் பெற்றது. தொடா்ந்து ஒருவரை ஒருவா்முஸாபாச் செய்து பெருநாள் வாழ்த்துக்களையும் பாிமாாிக் கொண்டனா்.