நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் மாணவர்களின் சமூக சீர்கேடும்

இன்றைய உலகின் நஇன்றைய உலகின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாணவர்கள் பல்வேறு சமூக சீர்கேடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனமெடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கி.ஜெயந்திமாலா தெரிவித்தார்.
எருவில் பெத்தான்குடி மக்கள் நடாத்தும் 2016 ஆம் ஆண்டிற்கான மகுடம் சூட்டும் மகிழ்ச்சி பெருவிழா நேற்று மாலை எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தின் வெளி வீதியில் நடைபெற்றது. பெத்தான்குடி தலைவரும் முன்னால் திடீர் மரண விசாரணை அதிகாரியும், சமாதான நீதிவானுமாகிய ச.பேரின்பநாயகம் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கி.ஜெயந்திமாலா மற்றும் சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணியும், ஓய்வு நிலை அதிபருமான இ.சோமசுந்தரம், பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் பா.வரதராஜன், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஆயர்வேத வைத்தியர் கி.இராசநாயகம், மண்முனை தென் எருவில் பற்று கலாசாரஉத்தியோகஸ்த்தர் த.பிரபாகரன், ஆன்மீக அதிதியாக கண்ணகி அம்மன் ஆலய பூசகர் கோபால் பத்தினியன், கௌரவ அதிதிகள், கிராம பெரியார்கள் ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், கல்விப்பொது சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தியடைந்தோர், பல்கலைக்கழக அனுமதி பெற்றோர், ஆன்மீக பணிக்காக, கல்விப்பணிக்காக, சமூகசேவைக்காக, கலைத்துறைக்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்த அனைவரையும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்றைய மாணவ சமூகமானது நவீன கால யுகத்திற்கு ஏற்றாற் போல் தொழிநுட்ப வளர்ச்சியில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் பயணிக்கின்ற போது பெற்றோர்களுடைய பார்வை அவர்கள் பக்கம் அதிகமாக இருத்தல் வேண்டும். வெறுமனே தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையுடன் தங்களது அக்கறையை காட்டிவிட்டு அத்தோடு முடித்து விடாமல் தொடர்ந்து அவர்கள் கற்கும் அனைத்து வகுப்புக்களிலும் பெற்றோர்களுடைய கவனம் அதிகமாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு பெற்றோர்களது கவனம் அவர்களது பக்கம் இருக்குமாக இருந்தால் நாட்டிற்கு நல்ல பிரஜையாக வருவதுடன் சமூகத்திலும் நல்லவர்களாக திகழ்வார்கள். அதனை விடுத்து ஐந்தாம் தரத்துடன் தங்களது பார்வையை நிறுத்தி விடுவோமாக இருந்தால் அவர்களது எதிர்காலம் மிகவும் மோசமான நிலையை நோக்கியே செல்லும்.
இன்று இந்த ஆலயத்திலே இவ்வாறான நிகழ்வு நடைபெறுவது அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது இன்று இங்கு பாராட்டுப் பெறுபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒரு புறம் இருக்க தாங்கள் எதிர்காலத்தில் பாராட்டு பெறவேண்டும் என்று நினைக்கத் தூண்டும் மற்றுமொரு செயற்பாடும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயங்களை பொறுத்தவரையில் பாராம்பரிய கலை, கலாசாரங்களை கட்டிக்காக்கும் நிகழ்வுகளோடு நின்று விடாமல் எதிர்கால சந்ததியினரின் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், இவ்வூரிலே பல துறைகளிலும் விற்பன்னர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்களை கௌரவிக்கின்ற செயற்பாடும் அத்தோடு ஊரில் சிரேஸ்ட பிரஜைகளாக இருந்து கொண்டு வரும் அனுபவ பொக்கிஷங்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்க நினைத்த செயற்பாடானது இவ்விழாவினை மேலும் சிறப்படைய செய்திருக்கின்றது.
இன்று சமூகத்திலே முதியவர்களை மதிப்பதென்பது மிகவும் குறைந்து கொண்டே செல்கின்றது. அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், இளைய சமூகத்திற்கு வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
ஆனால் சமூகம் அவர்களை கண்டு கொள்வதில்லை. இங்கு அந்த நிலை மாறி அவர்களையும் பாராட்டி கௌரவித்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும் கூறினார். நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனமெடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கி.ஜெயந்திமாலா தெரிவித்தார்.
எருவில் பெத்தான்குடி மக்கள் நடாத்தும் 2016 ஆம் ஆண்டிற்கான மகுடம் சூட்டும் மகிழ்ச்சி பெருவிழா நேற்று மாலை எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தின் வெளி வீதியில் நடைபெற்றது. பெத்தான்குடி தலைவரும் முன்னால் திடீர் மரண விசாரணை அதிகாரியும், சமாதான நீதிவானுமாகிய ச.பேரின்பநாயகம் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி.கி.ஜெயந்திமாலா மற்றும் சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணியும், ஓய்வு நிலை அதிபருமான இ.சோசுந்தரம், பட்டிருப்பு வலய ஆரம்பக்கல்விக்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் பா.வரதராஜன், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் ஆயர்வேத வைத்தியர் கி.இராசநாயகம், மண்முனை தென் எருவில் பற்று கலாசாரஉத்தியோகஸ்த்தர் த.பிரபாகரன், ஆன்மீக அதிதியாக கண்ணகி அம்மன் ஆலய பூசகர் கோபால் பத்தினியன், கௌரவ அதிதிகள், கிராம பெரியார்கள் ஆலய தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், கல்விப்பொது சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தியடைந்தோர், பல்கலைக்கழக அனுமதி பெற்றோர், ஆன்மீக பணிக்காக, கல்விப்பணிக்காக, சமூகசேவைக்காக, கலைத்துறைக்காக தங்களை அர்ப்பணித்து சேவை செய்த அனைவரையும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்றைய மாணவ சமூகமானது நவீன கால யுகத்திற்கு ஏற்றாற் போல் தொழிநுட்ப வளர்ச்சியில் பயணித்துக்கொண்டு இருக்கின்றது. அவ்வாறு அவர்கள் பயணிக்கின்ற போது பெற்றோர்களுடைய பார்வை அவர்கள் பக்கம் அதிகமாக இருத்தல் வேண்டும். வெறுமனே தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையுடன் தங்களது அக்கறையை காட்டிவிட்டு அத்தோடு முடித்து விடாமல் தொடர்ந்து அவர்கள் கற்கும் அனைத்து வகுப்புக்களிலும் பெற்றோர்களுடைய கவனம் அதிகமாக இருத்தல் வேண்டும்.
அவ்வாறு பெற்றோர்களது கவனம் அவர்களது பக்கம் இருக்குமாக இருந்தால் நாட்டிற்கு நல்ல பிரஜையாக வருவதுடன் சமூகத்திலும் நல்லவர்களாக திகழ்வார்கள். அதனை விடுத்து ஐந்தாம் தரத்துடன் தங்களது பார்வையை நிறுத்தி விடுவோமாக இருந்தால் அவர்களது எதிர்காலம் மிகவும் மோசமான நிலையை நோக்கியே செல்லும்.
இன்று இந்த ஆலயத்திலே இவ்வாறான நிகழ்வு நடைபெறுவது அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது இன்று இங்கு பாராட்டுப் பெறுபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒரு புறம் இருக்க தாங்கள் எதிர்காலத்தில் பாராட்டு பெறவேண்டும் என்று நினைக்கத் தூண்டும் மற்றுமொரு செயற்பாடும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயங்களை பொறுத்தவரையில் பாராம்பரிய கலை, கலாசாரங்களை கட்டிக்காக்கும் நிகழ்வுகளோடு நின்று விடாமல் எதிர்கால சந்ததியினரின் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், இவ்வூரிலே பல துறைகளிலும் விற்பன்னர்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்களை கௌரவிக்கின்ற செயற்பாடும் அத்தோடு ஊரில் சிரேஸ்ட பிரஜைகளாக இருந்து கொண்டு வரும் அனுபவ பொக்கிஷங்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்க நினைத்த செயற்பாடானது இவ்விழாவினை மேலும் சிறப்படைய செய்திருக்கின்றது.
இன்று சமூகத்திலே முதியவர்களை மதிப்பதென்பது மிகவும் குறைந்து கொண்டே செல்கின்றது. அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், இளைய சமூகத்திற்கு வழிகாட்டிகளாக திகழ்பவர்கள் அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
ஆனால் சமூகம் அவர்களை கண்டு கொள்வதில்லை. இங்கு அந்த நிலை மாறி அவர்களையும் பாராட்டி கௌரவித்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும் கூறினார்.