தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மேதின நிகழ்வினை தமிழ் முற்போக்கு கூட்டணியாக இம்முறை தலவாக்கலையில் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னனி தீர்பானித்துள்ளது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக விஷேட கூட்டம் இன்று தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகமான ஏ.லோரன்ஸ், நிதிச்செயலாளர், அரவிந்தகுமார் உட்பட கட்சியின் உயர் நிர்வாகத்தினர், அங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன்; இன்று எமது கட்சி கூட்டத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எதிர்வரும் மே தினைக் கூட்டத்தை தலவாக்கலையில் கொண்டாட ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.