பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு




பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று (07) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது ஓய்வு பெறுதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி;
அண்மையில் உருவாகிய பொலிஸ்மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ்மா அதிபராக என்.கே.இலங்ககோன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ்மா அதிபராக அளப்பரிய சேவையாற்றிய திரு.இலங்ககோன் அவர்களுக்கு ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது சேவையைப் பாராட்டினார்.
இந்நாட்டின் 33வது பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிய என்.கே.இலங்ககோன் எதிர்வரும் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.