இன்று (26) கிழக்கு மாகாண சபையின் 57வது சபை அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் திருகோணமலை மாகாண சபையில் கூடியது.
சபை அமர்விற்கு ஆளும் கட்சி சார்பாக கிழக்குமாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட ஐந்து (05) உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை உட்பட மூன்று(03) உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் 08உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டமையினால் தவிசாளர் சபையினை ஒரு மணிநேரம் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.