இரத்ததான நிகழ்வு




கொட்டகலை We Teachers நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், இரத்ததான நிகழ்வொன்று  09.04.2016 அன்று சனிக்கிழமை கொட்டகலை தமிழ் மகா வித்தியால பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கொட்டகலை, அட்டன், தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த பலர் இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் வெளிகள இணைப்பாளர் எஸ்.கே. சந்திரசேகரன், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஆர்.சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'பெருந்தோட்ட மக்கள், முறையான போசாக்கு இன்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை அனைவரும் பல்வேறு இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.    இவர்களின் துயர்நீக்க குருதி வழங்கி உயிர்காப்போம்' என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது