இடிந்து விழுந்த இந்திய மேம்பால கட்டுமான நிறுவனம் இலங்கையிலும் பணி




இந்தியாவின் கல்கொத்த நகரில் இடிந்து விழுந்த மேம்பாலத்தை நிர்மாணித்த அதே நிறுவனம் இலங்கையிலும் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஒப்பந்தக்காரர்களாக செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் தற்பொழுது கொழும்பிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 வீடுகளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் மூலம் மாளிகாவத்தையில் வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளது.

குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் 6 பேர் இந்திய பாலம் இடிந்து விழுந்தமை தொடர்பில் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன்இ 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.