தெற்கு கட்சிகளுக்கே வடக்கில் மீண்டும் யுத்தம் தேவை




வடக்கில் புலிப் பயங்கரவாதிகள் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க மாட்டாது எனவும் மீண்டும் ஒருபோதும் யுத்தமொன்று ஏற்பட மாட்டாது எனவும், அவ்வாறான யுத்தமொன்றை உருவாக்க வேண்டிய தேவை தெற்கிலுள்ள கட்சிகளுக்கே காணப்படுவதாகவும் வட மாகாண சபைத் தலைவர் சீ.வி. கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி குறித்து தெற்கில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய தனியான விருப்பின் பேரில் யுத்தத்தை மேற்கொண்டார். அவரின் மரணத்தின் பின்னர் புலிகள் அமைப்பும் மறைந்துள்ளது. மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பு தலை தூக்க மாட்டாது. யுத்தத்தினால் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் காணப்படுவதில்லையெனவும் அவர் கூறியுள்ளதாக இன்றைய சிங்கள நாழிதலொன்று குறிப்பிட்டுள்ளது.