கருப்பு பணம் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும்: கீர்த்தி தென்னக்கோன்




இலங்கைக்கு உரித்துடைய பெருந்தொகையான கருப்பு பணம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், பாரியளவான நிதி மோசடித் தொடர்பில் கடந்த சில காலமாக தெளிவுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும், அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காது செயற்படுவதாக கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு கருப்பு பணமாக காணப்படும் விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, வெளிநாடுகளில் கருப்பு பணமாக இருக்கும் இலங்கை பணமானது நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும், இதற்கான தீர்வு யோசனை முன்வைக்கப்பட வேண்டுமென கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கோரிக்கை விடுத்தார்.