நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிக இடநெருக்கடி காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் அதிகப்படியாக 8000 பேர்வரை மட்டுமே இருக்கலாம் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நிஷாந்த தனசிங்க கூறியுள்ளார்.
ஆனால் தற்போது சிறைச்சாலைகளில் 18,000 பேர் வரை உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களுள் அதிகமானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது