தேசிய புதுவருட விளையாட்டுப்போட்டிக்கு விண்ணப்பம் கோரல்




(க.கிஷாந்தன்)

அட்டனில் நடைபெறவுள்ள இந்து மற்றும் சிங்கள சித்திரை புத்தாண்டை தேசிய விழாவாக கொண்டாட அரசாங்கம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் இடம்பெறவுள்ள இந்த புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் வீதி ஓட்டப்போட்டிகளான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய தத்தமது விண்ணப்பங்களை வைத்திய சான்றிதலுடன், விளையாட்டுத்துறை அதிகாரி, பிரதேச செயலாளர் காரியாலயம் அம்பகமுவ என்ற முகவரிக்கு இம்மாதம் 8ம் திகதி முன் கிடைக்ககூடியவாறு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.