பனாமா பேப்பர்ஸ்




உலகின் பிரபல அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்கள் பலரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களைக் கொண்ட மொசக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் எல் சல்வடோர் கிளை பாதுகாப்புத் தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
உலகின் பிரபல அரச தலைவர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் சொத்துக்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரகசிய கணக்குகள் தொடர்பில் அண்மையில் சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்பான ICIJ நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
வெளியான தகவலுக்கு அமைய எல் சல்வடோரில் அமைந்துள்ள மொசக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் கிளையை சுற்றிவளைப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
மொசக் பொன்சேகா நிறுவனத்தின் கணணிகள் பலவற்றைக் கைப்பற்றியதாக எல் சல்வடோர் சட்ட மாஅதிபர் அலுவலகம் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.
பனாமா ஆவணங்கள் தொடர்பில் எல் சல்வடோர் மக்கள் சட்டத்தை மீறியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ICIJ நிறுவனத்தின் அம்பலப்படுத்தலில் எல் சல்வடோரிலுள்ள 33 பேரின் இரகசிய கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.