துறைசார் முதன்மை மகளிருக்கான கௌரவிப்பு





ஏ.எச்.ஏ. ஹுஸைன்


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின  நிகழ்வும் மற்றும் துறைசார் முதன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

 'தடைகளைத் தாண்டி...' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பிரதான அம்சமாக காத்தான்குடி பிரதேசத்தின் தேர்வு செய்யப்பட்ட கலை, இலக்கியம், வைத்தியம், நிருவாகம், கல்வி, ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மையாளர்களாக சாதனை புரிந்த 20 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சறோஜினிதேவி சார்ள்ஸ், தென் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, மட்டக்களப்பு மத்தி வலைய முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ. நசீரா, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் DR.ILM றிபாஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் ஆகியோரும் சமூக நல செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.