ஆண்களை உள்ளே செல்ல அனுமதிக்கும் இந்துக் கோயில்கள் அனைத்திலும் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என மஹாராஷ்ரா மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவில்களின் கருவறைக்குள் தொன்றுதொட்டு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என கோவில்களின் சார்பில் வாதிடப்பட்டது.
பெண்களுக்கு அனுமதி மறுக்கும் எவருக்கும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என பம்பாய் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு 60 ஆண்டுகள் பழமையான சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் குறித்த சட்டம் இதுவரை கடுமையாக பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
ஜனவரி மாதத்தில் கோயில் ஒன்றினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த திருப்தி தேசாய் என்ற பெண், சனிக்கிழமை மீண்டும் அதே கோயிலுக்குச் செல்ல உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.