ஏறாவூரில் தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு





 மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், அமைச்சர் றவுப் ஹக்கீம்,கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்;, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட பல உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.