பேலியகொட கறுப்புப் பாலம் மீது விபத்து




பிரதான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பேலியகொட கறுப்புப் பாலம் மீது கொள்கலன் வாகனமொன்று நேற்று மோதி (07) விபத்துக்குள்ளானதை அடுத்தே ரயில் போக்குவரத்தில் தாமதம் நிலவியுள்ளது.
அலுவலக நேர ரயில் சேவைகள் பலவற்றில் தாமதம் நிலவியுள்ளதுடன், ஒரு மார்த்திலான ரயில் போக்குவரத்து மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.
விபத்தில் ரயில் பாதைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதனை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் குறிப்பிட்ட பாலம் மீது கொள்கலன் வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
3.5 மீற்றர் உயரம் வரையான வாகனங்கள் மாத்திரமே இந்த பாலத்தின் ஊடாக பயணிக்கலாம் என பாலத்தின் இருபுறமும் அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயினும் சாரதிகளின் கவனயீனம் காரணமாக இதுபோன்ற விபத்துகள் இடம்பெறுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்