முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிலையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத்துத் தெரிவித்தார்.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தனிப்பட்ட முறையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அடங்கலாக 226 பேர் பாதுகாப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
நாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனத்தை மஹிந்த ராஜபக்ஸ பதவியிலிருந்து செல்கையில் எடுத்துச் சென்றதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஆட்சிக்கு வந்து 1 வருடமும் 3 மாதங்களும் கடந்துள்ள நிலையில், தாம் வெளிநாட்டிலிருந்து குண்டு துளைக்காத வாகனங்கள் எதனையும் தருவிக்கவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்திய வாகனத்தையே தற்போது தாம் பாவிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் இராணுவத்தினர் எவரும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்