இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் அதுவரைஇ இலங்கை அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இலங்கை கடற்படை வசம் உள்ள படகுகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும் எனவும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தான் தமிழ் மக்களின் கோரிக்கை. இதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.