எமது கலாசாரம் மற்றும் கமத்தொழில் ஆகியவற்றிற்கு இடையிலான பாரம்பரிய உறவினை பிரதிபலிக்கும் புதிய அரிசி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (02) முற்பகல் பொலன்னறுவை கல் விகாரை வளவில் இடம்பெற்றது.
உரிய காலத்தில் மழை பொழியச் செய்து நாட்டை விவசாயத்தில் சுபீட்சமாக்கும் பொருட்டு புத்தபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளல் அன்று தொடக்கம் நிலவி வரும் பாரம்பரிய புதிய அரிசி விழா மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வருட சம்பிரதாயபூர்வ புதிய அரிசி விழாவினை ஆரம்பித்து பொலன்னறுவை கல் விகாரை புத்தர் சிலைக்கு அருகே பால் உணவு பூஜையில் ஈடுபட்ட ஜனாதிபதி புதிய அரிசி விழாவின் மதக் கிரியைகளில் ஈடுபட்டார்.
பின்னர் அதற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரிசி விழா ஊர்வலம் கல் விகாரை புத்தர் சிலை வரை வலம் வந்தது.
புத்த பெருமானின் புனித சின்னங்களை தருவித்தல், புனித சின்னங்களை புத்தர் சிலைக்கு அருகே வைத்தல், கல் விகாரையின் சயன நிலை சிலையின் கால்களை கழுவுதல் மற்றும் புதிய அரிசியினை பூஜை செய்தல் என்பன ஜனாதிபதியின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது.